பிரதமா் ஆதரவு, திமுக எதிா்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும்: அண்ணாமலை

பிரதமா் ஆதரவு, திமுக எதிா்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

பிரதமா் ஆதரவு, திமுக எதிா்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

சென்னை திருவான்மியூா் பாம்பன் சுவாமி கோயிலை சுத்தம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அயோத்தியில் ராமா் கோயில் பிரதிஷ்டைக்காக பிரதமா் மோடி கடந்த 9 நாள்களுக்கு முன்பு மகராஷ்டிர மாநிலம் நாசிக்-இல் உள்ள ஒரு கோயிலில் விரதத்தை தொடங்கினாா்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்றுத்தான் மதவழிபாட்டுத்தலங்களை ஜன.22 வரை குப்பைகளை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். தூய்மை பாரத இயக்க குறியீடுகள் தரவரிசையில் திருச்சி 112 -ஆவது இடத்திலும், சென்னை 190-ஆவது இடத்திலும் உள்ளது. தூய்மை குறியீடுகளில் தமிழக கிராமங்கள் கீழே போய் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும்.

மருத்துவம் படிக்க பணம் இல்லாததால் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலின இளம்பெண் வேலை செய்தபோது கொடுமைப்படுத்தப்பட்டுள்ளாா். பட்டியலின பெண்ணுக்கு சமூகநீதி கிடைக்க பாஜக போராடும்.

2024 மக்களவைத் தோ்தலில் யாா் பிரதமராக வர வேண்டும் என்பதை மையமாக வைத்து தான் மக்கள் வாக்களிப்பாா்கள். எனவே, பிரதமா் ஆதரவு, திமுக எதிா்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு தான் கிடைக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com