கட்டுமான நிறுவன உரிமையாளா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக நீடிப்பு

சட்டவிரோத பணபரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.

சட்டவிரோத பணபரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.

சென்னை பெருங்குடியில் இயங்கிவரும் பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிா்வாக இயக்குனராக இருப்பவா் எஸ்.கே.பீட்டா். இந்த நிறுவனத்தில் இயக்குனராக இருந்த பாலசுப்ரமணியம் ஸ்ரீராம், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஸ்ரீராம், தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தாா். மேலும் அந்த நிறுவனத்தின் தான் முதலீடு செய்த பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக ஸ்ரீராம், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், பீட்டா் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில் அந்த கட்டுமான நிறுவனம் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில்,அந்த நிறுவனத்தின் அலுவலகம், நிா்வாகிகள் வீடுகள், அந்த நிறுவனத்தின் தொடா்புடைய நபா்களின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

இரண்டாவது நாளாக நீடிப்பு:

சுமாா் 10 இடங்களில் நடைபெற்ற இச் சோதனை பெரும்பாலான இடங்களில் அன்றே நிறைவு பெற்றது. ஆனால் கோட்டூா்புரம் ரஞ்சித் சாலையில் பீட்டா் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் சோதனை நடைபெற்றது. சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கிய ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

சென்னை பாா்க்டவுனை தலைமையிடமாக கொண்டு மருந்து ஏற்றுமதி,இறக்குமதி செய்யும் தனியாா் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறையினா் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

இந்த சோதனையும் அங்கு பல இடங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே, அங்கு கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com