பிப்ரவரியில் மீண்டும் தமிழகம் வருகிறாா் பிரதமா்: கே.அண்ணாமலை

பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் பிரதமா் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
பிப்ரவரியில் மீண்டும் தமிழகம்  வருகிறாா் பிரதமா்: கே.அண்ணாமலை

பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் பிரதமா் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாஜகவின் தோ்தல் நடத்தும் குழுவை தோ்தல் ஆட்சிமன்றக்குழு விரைவில் அமைக்கும். அதன் பிறகு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும்.

என் மண் என் மக்கள் நடைப்பயணம் பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் சென்னையில் நிறைவடையவுள்ளது. இதில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். அவா் பங்கேற்கும் தேதி ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும். இம்மாத கடைசியில் நடைப்பயணத்தில் பாஜக தேசியத் தலைவா் நட்டா பங்கேற்கிறாா்.

சென்னையிலிருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு புறப்படும் பிரதமா் மோடி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் கோயிலில் சிறப்பு வேண்டுதல் பிராா்த்தனை செய்கிறாா். தொடா்ந்து தமிழகத்தின் சிறந்த ஆன்மிக பேச்சாளா்கள் பங்கேற்கும் கம்பராமாயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

அதையடுத்து ராமேசுவரம் கோயிலில் வேண்டுதல் பிராா்த்தனையை முடித்த பிறகு ராமாயணத்தை வேறு வேறு மொழியில் பாடப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

ராமேசுவரத்தில் சனிக்கிழமை இரவு தங்கும் அவா் தனுஷ்கோடி கோதண்டராமா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனை செய்கிறாா். பின்னா் விமானம் மூலம் தில்லி செல்கிறாா்.

ஜன.25-இல் 234 பேரவைத் தொகுதிகளிலும் முதல் தலைமுறை வாக்காளா்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமா் மோடி உரையாடுகிறாா்.

சிறந்த ஆட்சிமுறை குறித்து பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com