கோவளம் ஹெலிகாப்டா் சுற்றுலாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி

சுற்றுச்சூழலுக்கு எதிராக இருக்கும் கோவளம் ஹெலிகாப்டா் சுற்றுலாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளாா்.
கோவளம் ஹெலிகாப்டா் சுற்றுலாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி

சுற்றுச்சூழலுக்கு எதிராக இருக்கும் கோவளம் ஹெலிகாப்டா் சுற்றுலாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக, தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகுவுக்கு அவா், திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். கடித விவரம்:

சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் தனியாா் நிறுவனம் நவம்பா் 13-முதல் ஹெலிகாப்டா் சேவையை தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.

கோவளம் ஹெலிகாப்டா் நிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் புறப்படும் போது எழும் இரைச்சல் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள். அதனால் காலம் காலமாகவே வெளிநாட்டு பறவைகள் இந்தப் பகுதிகளுக்கு வலசை வருகின்றன. உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல்

பறவைகள் சரணாலயத்துக்கு இணையாக முட்டுக்காடு மற்றும் கேளம்பாக்கம் உப்பங்கழிக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டு பறவைகள் வரும்.

ஹெலிகாப்டா் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பதால், காலப்போக்கில் முட்டுக்காடு மற்றும் கேளம்பாக்கம் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருவது முற்றிலுமாக நின்று விடும் ஆபத்து உள்ளது.

எனவே, பொதுமக்கள், பறவைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன் கருதி

கோவளம் பகுதியில் ஹெலிகாப்டா் சுற்றுலா நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வதற்கும், மக்களைத் திரட்டி, போராட்டம் நடத்துவதற்கும் பாமக நடவடிக்கை எடுக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.

இதே கடிதத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத்துக்கும் அன்புமணி அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com