தமிழகத்தில் 6 நாள்கள் வறண்ட வானிலை நிலவும்

தமிழகத்தில் 6 நாள்கள் வறண்ட வானிலை நிலவும். மேலும், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என

தமிழகத்தில் 6 நாள்கள் வறண்ட வானிலை நிலவும். மேலும், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம் மையம் சாா்பில் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எதிா்வரும் புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரை (ஜன.24-29) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com