ஸ்ரீராமர் கோயிலுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும், வருகிற மக்களவைத் தேர்தலுக்கும் தொடர்பில்லை என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும், வருகிற மக்களவைத் தேர்தலுக்கும் தொடர்பில்லை என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஹைதராபாதிலிருந்து செவ்வாய்க்கிழமை மதுரைக்கு வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான 500 ஆண்டுகாலப் போராட்டம் இறுதியில் வெற்றியில் முடிந்தது. ராமர் மதத் தலைவர் அல்லர்; அவர் இந்திய நாகரிகம், பண்பாட்டின் உருவகம். அவர் ஒரு சிறந்த ஆட்சியாளர், சிறந்த கணவர், சிறந்த மகன். அதுமட்டுமல்லாது, பல கடுமையான சூழலிலும் சத்தியத்தின் வழி நின்றவர்.
அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் அமைவதற்கு பொதுமக்கள், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, விசுவ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர்கள் அசோக் சிங்கால், வினய் கட்டியார் உள்ளிட்டவர்கள் முக்கியக் காரணமாக இருந்தனர்.
அதுமட்டுமன்றி, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கே. பராசரன் அயோத்தி கோயிலுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்டவர். இவர்களை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு, ராமரின் நற்குணங்கள், வழிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கும், வருகிற மக்களவைத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராம ராஜ்யம் என்பது சிறந்த நிலை. 
இதனால்தான், ராம ராஜ்யம் அமைய வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார்.
ராம ராஜ்யம் என்பது ஊழல் இல்லாதது, சுரண்டல் இல்லாதது, அடாவடித்தனம் இல்லாதது, ஜாதி, மதம் மூலம் ஏற்றத்தாழ்வுகள் இல்லாதது என்று அர்த்தம்.
எனவே, தற்போதைய சூழலில் இந்தியா ஒரு வலிமையான நாடாக அமையும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com