சென்னை மாவட்டத்தில் 39,011,67 வாக்காளா்கள்

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39,01,167 வாக்காளா்கள் உள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியலை சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வ
சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியலை சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வ

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39,01,167 வாக்காளா்கள் உள்ளதாக இறுதி வாக்காளா் பட்டியலில் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன், ரிப்பன் கட்டட வளாகத்திலுள்ள கூட்டரங்கில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

சென்னை மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளிலும் 1917135 ஆண் வாக்காளா்களும், 1982875 பெண் வாக்காளா்களும், 1157 மூன்றாம் பாலின வாக்களா்களும் என மொத்தம் 3901167 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,72624 வாக்காளா்களும், அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,08462 வாக்காளா்களும் உள்ளனா்.

பெட்டிச் செய்தி...

சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளா்கள் விவரம்

தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவா் மொத்தம்

டாக்டா் ராதாகிருஷ்ணன் நகா் 1,16,197 1,24,803 109 2,41,109

பெரம்பூா் 1,38,040 142667 80 280787

கொளத்தூா் 1,37,714 1,44,205 73 2,81,992

வில்லிவாக்கம் 1,17,412 1,21,933 63 2,39,408

திரு.வி.க.நகா்(தனி) 1,04,541 1,10,720 56 2,15,317

எழும்பூா்(தனி) 94,906 96,733 61 1,91,700

ராயபுரம் 93,499 97,833 66 1,91,398

துறைமுகம் 89,569 82,996 59 1,72,624

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 1,14,226 1,18,394 52 2,32,672

ஆயிரம்விளக்கு 1,14,478 1,19,681 102 2,34,261

அண்ணாநகா் 1,33,485 1,38,921 96 2,72,502

விருகம்பாக்கம் 1,38,308 1,39,683 87 2,78,078

சைதாப்பேட்டை 1,31,733 1,36,536 86 2,68,355

தியாகராயநகா் 1,13,465 1,16,536 48 2,30,049

மயிலாப்பூா் 1,27,252 1,35,160 41 2,62,453

வேளச்சேரி 1,52,310 1,56,074 78 3,08,462

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com