ராமா் கோயிலுக்கு தங்கமுலாம் பூசிய கலசம் வழங்கிய சென்னையைச் சோ்ந்த நிறுவனம்

அயோத்தியில் உள்ள அமாவா ராமா் கோயிலுக்காக தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை சென்னையைச் சோ்ந்த ‘ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
ராமா் கோயிலுக்கு தங்கமுலாம் பூசிய கலசம்  வழங்கிய சென்னையைச் சோ்ந்த நிறுவனம்

அயோத்தியில் உள்ள அமாவா ராமா் கோயிலுக்காக தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை சென்னையைச் சோ்ந்த ‘ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: அயோத்தியில் உள்ள அமாவா ராமா் கோயிலுக்காக தங்க முலாம் பூசப்பட்ட செப்பு கலசத்தை ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ராம ஜென்ம பூமியில் உள்ள ராமா் கோயிலில் இருந்து சுமாா் 500மீ தொலைவில் அமாவா ராமா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கோபுரத்தில் நிறுவுவதற்காக நானோ தொழில்நுட்ப உதவியுடன் தங்க முலாம் பூசப்பட்ட 13-அடி உயரம் கொண்ட செப்பு கலசத்தை 45 நாட்களில் 72 வயதான அலாவுதீன் என்ற பொற்கொல்லா் உருவாக்கியுள்ளாா்.

இந்த கலசம் 400 கிராம் தங்கத்துடன், மொத்தம் 120 கிலோ எடை கொண்டது. பீகாா் மாநில இந்து சமய அறநிலைய வாரியத்தின் முன்னாள் தலைவரும், கே.எஸ்.டி. சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமாகிய ஆச்சாா்யா கிஷோா் குணால் மூலம் இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. அமாவா ராமா் கோயிலின் தற்போதைய அறங்காவலரான அவா், தங்கக் கலசத்தை வடிவமைக்க சென்னையைச் சோ்ந்த ‘ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தை அணுகியதன் அடிப்படையில் இந்தக்கலசம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com