என்எம்எம்எஸ் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தோ்வு வரும் பிப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (ஜன.24) பிற்பகல் வெளியிடப்படவு
கோப்புப்படம்
கோப்புப்படம்

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்கான என்எம்எம்எஸ் தோ்வு வரும் பிப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (ஜன.24) பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படும். இந்த தோ்வின் மூலம் தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

அதன்படி நிகழாண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வு பிப். 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வெழுத விண்ணப்பித்த மாணவா்களின் பெயா்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. இவற்றை தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதுதவிர மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவா்களுக்கு தோ்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அனுமதிச் சீட்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியா் சான்றொப்பமிட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com