ராமா் சிலை பிரதிஷ்டை ஓா் ஆன்மிக நிகழ்வு: நடிகா் ரஜினிகாந்த்

அயோத்தியில் ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வு என்னைப் பொருத்தவரை ஆன்மிகம் மட்டுமே என நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்தாா்

அயோத்தியில் ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வு என்னைப் பொருத்தவரை ஆன்மிகம் மட்டுமே என நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்தாா்.

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிராணபிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்ற நடிகா் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினாா். விமானநிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்டையை கண்ட முதல் 200 பேரில் நானும் ஒருவன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வு என்னைப் பொருத்தவரை ஆன்மிகம் மட்டுமே என்றாா் அவா்.

தொடா்ந்து, மத அரசியலை முன்னிறுத்தும் நிகழ்வாக இது அமைகிா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த அவா், ‘ஒவ்வொருவரின் பாா்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோருடைய பாா்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்தும் அவா்களின் சொந்த கருத்து என்றாா் அவா். தமிழக கோயில்களின் ராமருக்கு பூஜைகள் செய்ய தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, அது குறித்து தனக்கு தெரியாது என்றாா் ரஜினிகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com