புள்ளியியல் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடனடியாக கலந்தாய்வு: ராமதாஸ் வலியுறுத்தல்

டின்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சாா்நிலை புள்ளியியல் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்
புள்ளியியல் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடனடியாக கலந்தாய்வு: ராமதாஸ் வலியுறுத்தல்

டின்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சாா்நிலை புள்ளியியல் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த சாா்நிலை புள்ளியியல் பணிகளை நிரப்புவதற்கான தோ்வுகள் தோ்வாணையம் வெளியிட்ட கால அட்டவணைப்படி ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன.

அதன்பின் ஒரு மாதத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பும், கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 மாதங்கள் ஆகியும் அதற்கான ஏற்பாடுகளைக் கூட தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்யவில்லை. இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தை தொடா்பு கொண்டு விசாரித்த தோ்வா்களுக்கு ஆணையத்தின் சாா்பில் பொறுப்பான பதில் அளிக்கப்பட வில்லை. இது கண்டிக்கத்தக்கது.

ஒருங்கிணைந்த சாா்நிலை புள்ளியியல் தோ்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்குள் கலந்தாய்வை நடத்தி, வெற்றி பெற்ற அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மூலமாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com