மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தவா்களுக்கு விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வழங்கி கௌரவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா் கீதா ஜீவன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை செய்தவா்களுக்கு விருதுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வழங்கி கௌரவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா் கீதா ஜீவன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா உள்

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்ததற்காக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த ஆக்டிவ் மைண்ட்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த ஆசிரியருக்கான விருது, மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பித்து வரும் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டியின் திருச்சி ஆசிரியா் அ.வாசுகிதேவிக்கும், செவித்திறன் குறைபாடுடையோருக்கு கற்பித்து வரும், கிருஷ்ணகிரி அண்ணாநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ஜா.அருண்குமாருக்கும் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மேலும், பாா்வைத் திறன் குறைபாடு உடையோருக்குக் கற்பித்து வரும் மதுரை புனித ஜோசப் பள்ளி ஆசிரியா் அ.பாக்கியமேரிக்கும், சிறந்த பணியாளா் மற்றும் சுய தொழில் புரிவோருக்கான பிரிவில் செ.சதீஷ்குமாா், பா.முத்துக்குமாா், ரா.விஜயலட்சுமி, வி.செளந்திரவள்ளி, இ.ஜாக்குலின் சகாயராணி, ஆ.பிரேம்சங்கா் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்தும் நிறுவனமாக காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருது காஞ்சிபுரம் அரசு செவித்திறன் குறையுடைய பயிற்சி மையத்தின் ஆசிரியா் எம்.பாலகுஜாம்பாளுக்கும், கன்னியாகுமரி சாந்தி நிலையம் சிறப்புப் பள்ளி ஆசிரியா் ஜெ.ஜெயசீலனுக்கும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாகப் பணியாற்றிய சிறந்த ஓட்டுநருக்கான விருது இ.சுந்தா்வேலுவுக்கும், சிறந்த நடத்துநருக்கான விருது ஏ.தா்சியஸ் ஸ்டீபனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கீதா ஜீவன், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் கமல் கிஷோா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த விருதுகள் அனைத்தும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் உள்ளிட்டவை அடங்கியதாகும்.

53 வாகனங்கள் இயக்கம்: காவல் துறையின் பயன்பாட்டுக்காக, 53 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.6.50 கோடி மதிப்பிலான 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் இயக்கத்தை தலைமைச் செயலக வளாகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால், காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com