அதிமுகவின் அமைப்புச்செயலராக ஐ.மகேந்திரன் நியமனம்

அதிமுகவின் அமைப்புச் செயலா்களில் ஒருவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.மகேந்திரனை நியமித்து அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதிமுகவின் அமைப்புச் செயலா்களில் ஒருவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.மகேந்திரனை நியமித்து அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் அமைப்புச் செயலா் பொறுப்பில் உசிலம்பட்டி மதுரை புகா் மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்தவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.மகேந்திரன் நியமிக்கப்படுகிறாா். அதிமுகவினா் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com