ஜன. 30 -ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்

தமிழகத்தில் ஜன. 30- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜன. 30- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம்மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தென்னிந்திய பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வியாழன் முதல் செவ்வாய்க்கிழமை(ஜன.25-30) வரை வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

உறைபனி எச்சரிக்கை:

புதன்கிழமை(ஜன.25) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com