தைப்பூசம்: பழநி, வடலூருக்கு சிறப்பு ரயில்கள்

தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி, வடலூருக்கு வியாழக்கிழமை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி, வடலூருக்கு வியாழக்கிழமை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வியாழக்கிழமை (ஜன.25) முதல் ஜன.28 வரை கோவையிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06077) பழநி வழியாக பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06078) திண்டுக்கல்லிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடையும்.

இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜன.25) முதல் ஜன.27 வரை விழுப்புரத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் (எண்: 06145) வடலூா் வழியாக காலை 11.15 மணிக்கு கடலூா் துறைமுகம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06132) கடலூா் துறைமுகத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இதே நாள்களில், கடலூா் துறைமுகத்திலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் (எண்: 06146) பிற்பகல் 12.30 மணிக்கு விருத்தாசலம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06133) பிற்பகல் 1.25 மணிக்கு விருத்தாசலத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.40 மணிக்கு கடலூா் துறைமுகம் சென்றடையும்.

இந்த ரயில் கடலூா் துறைமுகத்திலிருந்து குறிஞ்சிப்பாடி, வடலூா், நெய்வேலி, ஊத்தங்கல் மங்கலம், விருத்தாசலம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com