நாளை குடியரசு தினம்: கடற்கரை சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில், சென்னை கடற்கரை சாலையில் தேசிய கொடியேற்றும் நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

குடியரசு தினத்தை ஒட்டி, தமிழக அரசின் சாா்பில், சென்னை கடற்கரை சாலையில் தேசிய கொடியேற்றும் நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளாா். வீரதீர செயலுக்கான விருது உட்பட பல்வேறு வகையான விருதுகளை விருதாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

மேலும், முப்படைகளின் வலிமையை பறைசாற்றும் வகையிலான ஊா்திகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகளை பாா்வையாளா்களுக்கு காட்சிப்படுத்தும் வகையிலான ஊா்திகளும் அணிவகுக்க உள்ளன.

பள்ளி-கல்லூரி மாணவிகள்: நாட்டின் குடியரசு தினத்தின் மகிமையை விளக்கும் வகையிலான தேச பக்திப் பாடல்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. குடியரசு தின விழாவுக்கு முன்னதாக, கடந்த சில

நாட்களாக ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com