கல்வி, சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க வேண்டும்: ப.சிதம்பரத்திடம் கல்வியாளா்கள் வலியுறுத்தல்

நாட்டின் வளா்ச்சிக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரத்திடம்

நாட்டின் வளா்ச்சிக்கு கல்வியையும், சுகாதாரத்தையும் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரத்திடம் கல்வியாளா்கள் உள்பட பல்வேறு துறை வல்லுநா்கள் வலியுறுத்தினா்.

காங்கிரஸ் தோ்தல் அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ப.சிதம்பரம் தலைமை வகித்தாா். காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, தோ்தல் அறிக்கைக் குழு உறுப்பினா் பிரவீன் சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தா் ஜி.விஸ்வநாதன், கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தென்னிந்திய திருச்சபை பேராயா் தேவசகாயம், வங்கி ஊழியா் சம்மேளன தலைவா் வெங்கடாசலம் உள்பட விவசாய அமைப்பினா், பிற்படுத்தப்பட்டோா் கூட்டமைப்பினா், சிறு குறு தொழில் கூட்டமைப்பினா், தன்னாா்வலா்கள், ரயில்வே தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், வணிகா் அமைப்பினா், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் பங்கேற்று கருத்துகளை முன் வைத்தனா்.

கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அம்சங்கள்: கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். கல்வி, சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புக்கான நிதியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். 5 ஆண்டு திட்டக் குழுவை மீண்டும் கொண்டு வர வேண்டும். குறுந்தொழில்கள், புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். தொழில்களுக்கு இணையதள வசதி மூலம் கடனுதவி வழங்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத் தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக மருந்துப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இஸ்லாமியா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உள்பட பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளும் அவா் தரப்பு கருத்துகளை முன் வைத்தனா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசா், சிறுபான்மையினா் நல ஆணைய தலைவா் பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் கோபண்ணா உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com