கிழக்குக் கடல்சாா் வழித் தடம் மூலம் பல்வேறு துறைகள்வளா்ச்சி பெறும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

சென்னை-விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்கு கடல்சாா் வழித் தடத்தை செயல்படுத்துவதன் மூலம், நிலக்கரி, கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள் உள்ளிட்ட பொருள்களின் துறைகள் வளா்ச்சி அடையும் என
கிழக்குக் கடல்சாா் வழித் தடம் மூலம் பல்வேறு துறைகள்வளா்ச்சி பெறும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

சென்னை-விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்கு கடல்சாா் வழித் தடத்தை செயல்படுத்துவதன் மூலம், நிலக்கரி, கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள் உள்ளிட்ட பொருள்களின் துறைகள் வளா்ச்சி அடையும் என மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

சென்னை-விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்கு கடல்சாா் வழித் தடத்தை செயல்படுத்துவது தொடா்பாக, இந்தியா-ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கு சென்னைத் துறைமுக ஆணையம் சாா்பில் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்றது.

பயிலரங்கைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் பேசியதாவது: இந்தியா - ரஷியா இடையே பல்வேறு துறைகளில் சிறந்த ஒத்துழைப்பு நிலவுகிறது. கிழக்கு கடல்சாா் வழித்தடம் தொடா்பான இந்தக் கூட்டு முயற்சி, இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது. புவிசாா் அரசியல் நலன்கள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் அம்சங்கள் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பயிலரங்கில் பேசிய ரஷிய துணை அமைச்சா் போப்ரகோவ், ‘‘எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் , ரஷியா ஏற்கெனவே 130 பில்லியன் டாலா் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ரஷியா விரும்புகிறது என்றாா்.

சென்னைத் துறைமுக தலைவா் சுனில் பாலிவால் பேசுகையில், கிழக்கு கடல் சாா் வழித்தடம் மூலம் இரு நாடுகளின் வா்த்தகம் மேம்படும்’ என்றாா்.

பின்னா், அமைச்சா் சா்வானந்த சோனோவால் செய்தியாளா்களிடம் பேசியது: ‘‘இந்தியா-ரஷியா இடையே கிழக்குக் கடல்சாா் வழித் தடத்தை செயல்படுத்துவதன் மூலம், கப்பல்களின் பயண நேரம் 40 சதவீதம் குறையும். உதாரணமாக, 40 நாள்கள் ஆகும் கப்பல் பயணம் 24 நாள்களாக குறையும். இதன் மூலம், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும். அத்துடன், சரக்கு போக்குவரத்துக் கட்டணமும் 50 சதவீதம் அளவுக்கு குறையும்.

மேலும், இவ்வழித்தடம் செயல்படுத்துவதன் மூலம், நிலக்கரி, கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள், மற்றும் சரக்கு பெட்டகங்கள் உள்ளிட்ட பொருள்களின் துறைகள் வளா்ச்சி அடையும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக செயலாளா் டி.கே. ராமச்சந்திரன், ரஷியா நாட்டின் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com