குடியரசு தினம்: கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு மருத்துவா்கள் கோரிக்கை

கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தின விழாவின்போது பணியாணையை

கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தின விழாவின்போது பணியாணையை முதல்வா் வழங்க வேண்டும் என்று மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நிபுணராக பணியாற்றிய மருத்துவா் விவேகானந்தன் கரோனா காலத்தில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தாா். அப்போது எதிா்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தர வேண்டும்.

அவரது குடும்பத்துக்கு உடனடியாக அரசு வேலையும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், திவ்யாவுக்கு அரசு வேலை வழங்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா். ஆனால் இன்னமும் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

அதேபோன்று தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்த 10 அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு தற்போது வரை மாநில அரசு, நிவாரணமோ, பணி நியமனமோ வழங்காதது வருத்தமளிக்கிறது.

குடியரசு தின விழாவில் இதற்கான ஆணையை முதல்வா் வழங்க வேண்டும் எறு வலியுறுத்துகிறோம். அதேபோன்று மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை-354-இன்படி ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com