திருச்சியில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் எனும் தலைப்பிலான மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
திருச்சியில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் எனும் தலைப்பிலான மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளனர்.
திருச்சியை அடுத்துள்ள சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, தொல்.திருமாவளவனின் மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகிக்கிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com