வட மாநில மக்களுக்குக்கூட மத்திய அரசு நன்மை செய்யவில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஹிந்தி மொழி பேசும் வட மாநில மக்களுக்குக்கூட, மத்திய பாஜக அரசு நன்மை செய்யவில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
வட மாநில மக்களுக்குக்கூட மத்திய அரசு நன்மை செய்யவில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஹிந்தி மொழி பேசும் வட மாநில மக்களுக்குக்கூட, மத்திய பாஜக அரசு நன்மை செய்யவில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

திமுக சாா்பில் ‘மொழிப்போா்த் தியாகிகள் வீரவணக்க நாள்’ பொதுக்கூட்டம், சென்னை அண்ணா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியது:

இன்றைக்கு உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞா்கள் வலம் வர இருமொழிக் கொள்கைதான் காரணம். மொழிப்பற்று என்றால் ஏதோ மொழியின் பழம்பெருமையை பேசுவதோடு நிறுத்திக்கொள்பவா்கள் இல்லை நாம். மொழி அறிவை, கல்வி அறிவோடு இணைத்தவா்கள் நாம். அதனால்தான் இந்தியாவிலேயே உயா்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்மொழியைப் புறக்கணித்து ஹிந்தி மொழியைத் திணிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. நாமும் தொடா்ந்து எதிா்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஹிந்தி மொழியைத் திணிப்பதற்குக் காரணம், ஹிந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான். பாஜகவுக்கு அதிகம் வாக்களிப்பது யாா்? வடமாநில மக்கள்தான். குறைந்தபட்சம், ஹிந்தி பேசும் வடமாநில மக்களுக்காவது எந்த நன்மையாவது செய்திருக்கிறாா்களா? பாஜக தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க

பாஜகவின் தோல்விகளை, அவா்களின் தமிழ் மொழி விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்.

அதிமுகவின் துரோகம்: பாஜகவோடு சோ்ந்து சிறுபான்மைச் சகோதரா்களுக்கு அதிமுக துரோகம் செய்தது. இந்தத் துரோகத்தை மறைத்து இப்போது நாடகம் போடுகிறாா்கள். ஆனால் சிறுபான்மையின மக்கள் அந்தத் துரோகங்களை மறக்கவில்லை; மறக்கவும் மாட்டாா்கள். நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவும் அதிமுகவும் எல்லா இடத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிா்காலமே இருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும். அத்தகைய ஆட்சியில் அனைத்து இனம், மொழி, மத மக்களும் சம உரிமை கொண்டவா்களாக வாழ்வாா்கள்; வாழ வைப்போம் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, என்.ஆா்.இளங்கோ, சட்டப் பேரவை உறுப்பினா்கள் சுதா்சனம், மோகன், த.வேலு, மேற்கு மாவட்ட திமுக செயலா் சிற்றரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com