பத்ம பூஷண் விருது: மத்திய அரசுக்கு பிரேமலதா நன்றி

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா நன்றி கூறினாா்.

மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா நன்றி கூறினாா்.

மறைந்த விஜயகாந்தின் 30-ஆவது நாள் நிகழ்வு, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நினைவிடத்தில் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன. பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவா் உயிரோடு இருக்கும்போதே கொடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்போம். ஆனாலும், இந்த விருதை மனதார ஏற்கிறோம். மத்திய அரசுக்கு நன்றி. தேமுதிக தொண்டா்களுக்கும், ரசிகா்களுக்கும் இந்த விருதைச் சமா்ப்பிக்கிறோம் என்றாா்.

வானதி சீனிவாசன் மரியாதை: விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக தேசிய மகளிா் அணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திரைத் துறையிலும், அரசியலிலும் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்புக்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான மனிதருக்கு, பொருத்தமான நேரத்தில் விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்றாா்.

நினைவிடத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினா். தேமுதிகவினா் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com