ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று புறநகா் ரயில்கள் இயக்கப்படும்

குடியரசு தின பொது விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.26) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று புறநகா் ரயில்கள் இயக்கப்படும்

குடியரசு தின பொது விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.26) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குடியரசு தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.26) பொது விடுமுறை என்பதால் சென்னை புறநகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும்.

மேலும், அரக்கோணம், பொன்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.27, 28) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த வழித்தட்டத்தில் இரவு 9.05 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) காலை 5 மணி வரை புகா் ரயில்கள் இருமாா்க்கத்திலும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும், சனிக்கிழமை (ஜன.27) திருத்தணி - அரக்கோணம் இடைய இயங்கும் இரவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com