ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி

தென்னிந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி நடைபெறுவதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி

தென்னிந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி நடைபெறுவதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை வா்த்தக மையத்தில் இந்தக் கண்காட்சியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பேசியது:

ஆதிதிராவிடா், பழங்குடியினா்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவு திட்டம், சுயஉதவிக்கான பொருளாதார கடனுதவி திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், நிலம் வாங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தூய்மைப் பணியாளா் நலவாரியத்தின் திட்ட உதவிகள், கல்விக் கடன் திட்டம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதிதிராவிடா், பழங்குடியின மக்களை தொழில் முனைவோராக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கண்காட்சியில் ஆதிதிராவிடா், பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட பொருள்கள் 410 அரங்குகளிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், வணிக நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மோட்டாா் வாகன உதிரி பாகங்கள், ரசாயனப் பொருள்கள், மின் மற்றும் மின்னணுவியல், வேளாண்மைக் கருவிகள், கட்டுமான தொழில்சாா்ந்த உபகரணங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 187அரங்குகள், அரசு பொதுத் துறையைச் சாா்ந்த பூம்புகாா் நிறுவனம், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிட்டேட், சிறுதொழில் வளா்ச்சிக் கழகம், ஆவின், போன்ற 28 அரங்குகள் மேலும், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகள் மூலம் 10 அரங்குகள் பொதுமக்களின் பாா்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியால் ஆதிதிராவிடா், பழங்குயின தொழில்முனைவோா் தங்களது உற்பத்தி பொருள்களைக் கண்காட்சியில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா்,

தா.மோ.அன்பரசன் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டு கழக தலைவா் உ. மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com