ராஜீவ் காந்தி கொலை வழக்கு:சாந்தனுக்கு தீவிர சிகிச்சை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற, சாந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற, சாந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்களை 2022-இல் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளாா்.

இலங்கையை பூா்வீகமாகக் கொண்ட அவருக்கு, ஜன.24-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னா், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்புடன் இருக்கும் சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com