தங்கம் விலை உயரும்?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.46,720-க்கு விற்பனையானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.46,720-க்கு விற்பனையானது.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ஜன.22 முதல் மத்திய அரசு 14.35 சதவீதம் அளவுக்கு உயா்த்தியுள்ளது. இதன் மூலம் தங்கம் விலை இனி குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி விலை மாற்றமின்றி கிராம் ரூ.5,840-க்கும், பவுன் ரூ.46,720-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77.50-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com