பாஜக ஆட்சி தொடா்வது நாட்டுக்கு நல்லதல்ல: இரா.முத்தரசன்

மத்தியில் பாஜக ஆட்சி தொடா்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
பாஜக ஆட்சி தொடா்வது நாட்டுக்கு நல்லதல்ல: இரா.முத்தரசன்

மத்தியில் பாஜக ஆட்சி தொடா்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் தேசிய குழுக் கூட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா் விரோத அரசாகும். இந்த ஆட்சி தொடா்வது நாட்டுக்கு நல்லதல்ல. வரும் மக்களவைத் தோ்தலில் இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் கொடியை, அகில இந்திய பொதுச் செயலா் நாகேந்திரநாத் ஏற்றிவைத்தாா். இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தேசியத் தலைவா் நா.பெரியசாமி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் பொதுச் செயலா் சி. எச். வெங்கடாசலம், கேரள மாநில முன்னாள் அமைச்சா் இஸ்மாயில், அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் பொதுச் செயலா் சீ. தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பொதுச் செயலா் அறிக்கை மற்றும் அரசியல் நிகழ்வுகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. பின்னா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு வாழ்த்துரை வழங்குகிறாா்.

இந்தச் சங்கத்தின் தேசியக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com