‘இன்சாட் 3 டிஎஸ்’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தீவிரம்

‘ஜிஎஸ்எல்வி எ‘ஃ‘ப்-14 ராக்கெட் இன்சாட் 3 டிஎஸ்’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

‘ஜிஎஸ்எல்வி எ‘ஃ‘ப்-14 ராக்கெட் இன்சாட் 3 டிஎஸ்’ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடா் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள், ‘ஜிஎஸ்எல்வி எ‘ஃ‘ப்-14’ ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து அடுத்த மாதம் (பிப்ரவரி ) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அதன்படி இன்சாட் செயற்கைகோள் பாகங்கள் மற்றும் இறுதிகட்ட சோதனைகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து செயற்கைகோள் ஏவுதலுக்காக அதன் பாகங்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு சொந்தமான ‘இன்சாட்-3டிஎஸ்’ மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 இமேஜிங் சேனல்கள் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். இதன் மூலம் புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம்.

ஏற்கெனவே, விண்ணில் செயல்பாட்டில் உள்ள ‘இன்சாட்-3டி’ மற்றும் ‘இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோளின் தொடா்ச்சியாகவே இந்த இன்சாட்-3டிஎஸ் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com