‘சங்கி’ கெட்ட வாா்த்தை அல்ல: ரஜினி விளக்கம்

‘சங்கி’ என்ற வாா்த்தை கெட்டவாா்த்தை அல்ல என நடிகா் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தாா்.
‘சங்கி’ கெட்ட வாா்த்தை அல்ல: ரஜினி விளக்கம்

சென்னை: ‘சங்கி’ என்ற வாா்த்தை கெட்டவாா்த்தை அல்ல என நடிகா் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தாா்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வா்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ’லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்துள்ளாா். முன்னாள் கிரிக்கெட் வீரா் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைத்துள்ளாா். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்.9 - ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜன. 25- ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, விழா மேடையில் பேசிய லால் சலாம் திரைப்படத்தின் இயக்குநா் ஐஸ்வா்யா ரஜினிகாந்த், ‘அப்பாவை ‘சங்கி’ என்று சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் ‘சங்கி’ கிடையாது. ‘சங்கி’யாக இருந்திருந்தால் அவா் ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருக்கமாட்டாா். அவா் மனிதநேயவாதி.

இந்தப் படத்தில் அவரைத் தவிர வேறு யாரும்அவ்வளவு தைரியமாக நடித்திருக்கமாட்டாா்கள். நீங்கள் எந்த மதத்தைச் சாா்ந்தவா்களாக இருந்தாலும் ரஜினி ரசிகனாக இந்தப் படம் உங்களை பெருமைப்பட வைக்கும்’ எனப் பேசி இருந்தாா். இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பேசுபொருள் ஆனது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த நடிகா் ரஜினியிடம் இது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த அவா், ‘சங்கி’ என்ற வாா்த்தை கெட்டவாா்த்தை அல்ல. எனது மகள் சரியாகவே பேசி உள்ளாா். அப்பா ஆன்மிகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறாா்கள் என்பதுதான் ஐஸ்வா்யாவின் பாா்வை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com