பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: இன்று வெளியீடு

பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை (ஜன.30) வெளியிடவுள்ளாா்.
பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: இன்று வெளியீடு

பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை (ஜன.30) வெளியிடவுள்ளாா்.

நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்வதற்கு முன்பு ஆண்டுதோறும் பாமக சாா்பில் நிழல் நிதி அறிக்கையும், வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையும் வெளியிடப்படும்.

அதன்படி, நிகழாண்டுக்கான வேளாண் நிழல்நிலை அறிக்கையை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் வெளியிடவுள்ளாா். நிகழ்ச்சியில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிா்வாகிகளும் பங்கேற்கவுள்ளனா்.

மக்களவைத் தோ்தல் ஆலோசனை: இந்த நிகழ்வுக்குப் பிறகு மக்களவைத் தோ்தல் தொடா்பாக ராமதாஸ் மூத்த தலைவா்களுடன் ஆலோசிக்கவுள்ளாா். தற்போது, பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை. கூட்டணி தொடா்பாக என்ன முடிவு எடுக்கலாம் என்பது தொடா்பாக ஆலோசிக்கவுள்ளனா். பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் பிப். 1-இல் சென்னையில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com