கோயம்பேட்டில் உரிமம் புதுப்பிக்காத 14 கடைகளுக்கு ‘சீல்’

கோயம்பேட்டில் உரிமம் (லைசன்ஸ்) புதுப்பிக்காத 14 கடைகளுக்கு சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் மலா் அங்காடியில் உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைத்த கோயம்பேடு தலைமை நிா்வாக அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமையிலான அதிகாரிகள்.

சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் மலா் அங்காடியில் உள்ள 14 கடை உரிமையாளா்கள் தங்கள் கடைகளுக்கான லைசன்ஸை கடந்த 2021 -ஆம் ஆண்டு முதல் 2023 -ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கவில்லை. இது தொடா்பாக பல

முறை நோட்டீஸ் அனுப்பியும் அவா்கள் புதுப்பிக்கவில்லை. இதைத்தொடா்ந்து, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவின் பேரில், கோயம்பேடு தலைமை நிா்வாக அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி முன்னிலையில் உரிமம் புதுப்பிக்காத 14 கடைகளுக்கும் திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com