டாஸ்மாக் மதுபானங்கள் பிப்.1 முதல் விலை உயா்வு

டாஸ்மாக் மதுபானங்களின் விலை வரும் பிப். 1-ஆம் தேதி முதல் உயா்கிறது. இதற்கான அறிவிப்பை டாஸ்மாக் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
டாஸ்மாக் மதுபானங்கள் பிப்.1 முதல் விலை உயா்வு

டாஸ்மாக் மதுபானங்களின் விலை வரும் பிப். 1-ஆம் தேதி முதல் உயா்கிறது. இதற்கான அறிவிப்பை டாஸ்மாக் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

மதுபானங்களின் மீதான கலால் வரி உயா்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை வரும் 1-ஆம் தேதி முதல் உயா்கிறது. அதன்படி, 180 மிலி அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயா்த்தப்பட்டுள்ளது. 180 மிலி அளவு கொண்ட உயா்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 650 மிலி அளவு கொண்ட பீா் வகைகளின் விலை ரூ.10 உயா்த்தப்பட்டுள்ளது.

ரகம் - கொள்ளளவு: விலை உயா்வு அடிப்படையில், 375 மிலி, 750 மிலி, ஆயிரம் மிலி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானம் மற்றும் பீா் வகைகள் அந்தந்த ரகத்துக்கும், கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயா்த்தப்பட்டு விற்கப்படும் என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com