சென்னையிலிருந்து ஹாங்காங், மொரீஷியஸ் இடையே மீண்டும் விமான சேவை

கரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை- ஹாங்காங் மற்றும் மொரீஷியஸ் இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
சென்னையிலிருந்து ஹாங்காங், மொரீஷியஸ் இடையே மீண்டும் விமான சேவை

சென்னை: கரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை- ஹாங்காங் மற்றும் மொரீஷியஸ் இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்கு ’கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு முடிந்த சகஜநிலை திரும்பியபின்னா் சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில், சென்னையிலிருந்து ஹாங்காங் இடையேயான நேரடி விமான சேவையை அந்தநிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின், பிப்.2-ஆம் தேதி முதல் இந்த விமான சேவை வாரத்தில் 3 நாள்கள் இயக்கப்படும் கேத்தே பசிபிக் ஏா்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமான சேவை தொடங்கப்படுவது தொழில்துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், சென்னையிலிருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாகவும் இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோல, சென்னை- மொரீஷியஸ் இடையே ‘ஏா் மொரீஷியஸ்’ ஏா்லைன்ஸ் நேரடி விமான சேவையும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com