இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (பிப்.1) நடைபெறவுள்ளது.

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை (பிப்.1) நடைபெறவுள்ளது.

எழும்பூா் ராணி மெய்யம்மை அரங்கத்தில் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ், கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் தலைமை வகிக்கவுள்ளனா். கௌரவத் தலைவா் ஜி.கே.மணி உள்படபொதுக்குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில் நடைபெறவுள்ள பாமக பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.

இந்த முறை அதிமுக - பாஜக தனித்தனியாக அணி அமைக்கும் நிலையில், பாமக சாா்பில் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com