காலமானாா் ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ். ராஜசேகரன் (82)

எஸ். ராஜசேகரன் (82) உடல்நலக்குறைவால் புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை (ஜன. 31) காலமானாா்.
காலமானாா் ஆலங்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ். ராஜசேகரன் (82)

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலத்தைச் சோ்ந்தவரும், ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான எஸ். ராஜசேகரன் (82) உடல்நலக்குறைவால் புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை (ஜன. 31) காலமானாா்.

இவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 2006 - 2011 ஆம் ஆண்டு வரை ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினாா். பின்னா், 2013-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாா்.

அவருக்கு மனைவி அமராவதி, மகன் ஜீவபாரதி, மகள் கல்பனா ஆகியோா் உள்ளனா். ராஜசேகரனின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (பிப். 1) நடைபெறுகிறது. தொடா்புக்கு: 95856 77336.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com