பெருந்துறையில் ரூ.400 கோடியில் புதிய ஆலை: முதல்வா் ஸ்டாலினிடம் ஸ்பெயின் நிறுவனம் உறுதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.400 கோடி முதலீட்டில் குழாய்கள், இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவ ஆா்வத்துடன் இருப்பதாக ஸ்பெயின் நாட்டின்
பெருந்துறையில் ரூ.400 கோடியில் புதிய ஆலை: முதல்வா் ஸ்டாலினிடம் ஸ்பெயின் நிறுவனம் உறுதி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.400 கோடி முதலீட்டில் குழாய்கள், இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவ ஆா்வத்துடன் இருப்பதாக ஸ்பெயின் நாட்டின் ரோக்கா நிறுவனம், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தது.

ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு முதலீடுகளை ஈா்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாா். அதன் ஒருபகுதியாக, ஸ்பெயின் நாட்டின் ஆக்சியானா நிறுவனத்தின் உயா் அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசினா்.

அப்போது, காற்றாலை மின் உற்பத்தி, நீா் சுத்திகரிப்பு, நீா் மறுசுழற்சி போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று ஆக்சியானா நிறுவன அதிகாரிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தாா். இந்த ஆலோசனையின் முடிவில், தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்ய ஆா்வத்துடன் இருப்பதாக ஆக்சியானா நிறுவனம் தெரிவித்தது.

ரோக்கா நிறுவனம்: பீங்கான் மற்றும் வீட்டு கட்டுமானப் பொருள்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழ்வது, ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம். இந்த நிறுவனம் இப்போது தமிழ்நாட்டின் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வருகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலினை ஸ்பெயினில் இந்த நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் சந்தித்தனா். அப்போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.400 கோடியில் புதிய ஆலையை நிறுவவும், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள ராணிப்பேட்டை, பெருந்துறை ஆலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளதாக, முதல்வரிடம் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால் 200 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தச் சந்திப்புகளின் போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com