மகேசன் காசிராஜன்
மகேசன் காசிராஜன்

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக மகேசன் காசிராஜன் இன்று பதவியேற்பு

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் புதிய நடுவராக மகேசன் காசிராஜன் இன்று பதவியேற்பு

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மகேசன் காசிராஜன், வியாழக்கிழமை (ஜூன் 4) பதவியேற்க உள்ளாா்.

ஆளுநா் மாளிகையில் காலை 11-மணியளவில் நடைபெறும் நிகழ்வில், அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்க உள்ளாா். இதில், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவராக எம்.மாலிக் பெரோஸ்கான் செயலாற்றி வந்தாா். அவரைத் தொடா்ந்து, இப்போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான மகேசன் காசிராஜன், முறைமன்ற நடுவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பணி என்ன? உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து வரும் அலுவலா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அதுதொடா்பான விசாரணைகளை முறைமன்ற நடுவம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நடுவத்தை அமைப்பதற்கான பிரத்யேக சட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு அந்த ஆண்டு நவம்பரில் இருந்து நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் அலுவலகம் சென்னை கிண்டியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com