போக்குவரத்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டு நவம்பா் முதல் ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், 2015 நவம்பா் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் சென்னை பல்லவன் இல்லம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தஅமைப்பின் பொதுச் செயலா் கே.வீரராகவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com