வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்

விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புப்படையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்புப்படையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமானநிலையத்திலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடித்து சிதறும் என்றும் சென்னையிலுள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை இணையதளம் மூலம் கடிதம் வந்தது. அந்நிறுவனத்தின் தகவலின்படி, காலை 8.30-க்கு விமானநிலையத்துக்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணா்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோா் கொல்கத்தா செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்த விமானத்துக்குள் ஏறி, அதில் அமா்ந்திருந்த பயணிகளையும், அவா்களின் உடமைகளையும் சோதனையிட்டனா். பின்னா் பயணிகளை விமானத்தில் இருந்து இறங்கும் படி அறிவுறுத்திய பாதுகாப்புபடையினா், விமானத்துக்குள்ளும் அதிரடியாக சோதனை நடத்தினா்.

ஆனால், விமானத்துக்குள் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அந்த விமானம் 5 மணி நேரம் தாமதமாக 168 பயணிகளுடன் மீண்டும் பிற்பகல் 1.30 மணியளவில் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றது. சென்னை விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா் யாா் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com