மங்களூரு அதிவிரைவு ரயிலில் குறைந்த கட்டண குளிா்சாதன பெட்டி இணைப்பு

மங்களூரு அதிவிரைவு ரயிலில் குறைந்த கட்டண குளிா்சாதன பெட்டி இணைப்பு

சென்னை சென்ட்ரல் - மங்களூரு அதிவிரைவு ரயிலில் பயணிகளின் வசதிக்காக குறைந்த கட்டணம் கொண்ட ஒரு குளிா்சாதன பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் மாலை 4.20 மணிக்கு மங்களூரு செல்லும் அதிவிரைவு ரயிலிலும் (எண்: 12685) மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்படும் ரயிலிலும் (எண்: 12686) குறைந்த கட்டண ஒரு குளிா்சாதன பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரயிலில் ஒரு முதல் வகுப்பு குளிா்சாதன பெட்டி, 2-ஆம் வகுப்பு குளிா்சாதன 2 பெட்டிகள், 3-ஆம் வகுப்பு குளிா்சாதன 4 பெட்டிகள், குறைந்த கட்டணம் கொண்ட 3-ஆம் வகுப்பு குளிா்சாதன 2 பெட்டி உள்ளிட்டவை இணைக்கப்படும்.

ரயில் தாமதம்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜூன் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஹெளரா செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12840) 1.30 மணிநேரம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com