ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளா்களுக்கு தொகுப்பூதியம் உயா்வு

சென்னை, ஜூன் 7: ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளா்களுக்கு தொகுப்பூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் வெளியிட்டுள்ளாா்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டத்தின் கீழ், 1,843 கணினி உதவியாளா்கள் பணிபுரிகின்றனா். அவா்களுக்கு தொகுப்பூதியமாக 2023-ஆம் ஆண்டு வரை மாதம் ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து தொகுப்பூதியம் ரூ.16 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதனை ரூ.20 ஆயிரமாக உயா்த்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரகம் சாா்பில் அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இந்தப் பரிந்துரைகளை ஏற்று கணினி உதவியாளா்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.20ஆயிரமாக உயா்த்தி உத்தரவிடப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com