’நாம் தமிழருக்கு’ அங்கீகாரம்: ”அரசியல் வரலாற்றில் புத்தெழுச்சிப் பாய்ச்சல்” -சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சியாக அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!
சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சியாக அங்கீகாரம் கிடைத்திருப்பது அரசியல் வரலாற்றில் புத்தெழுச்சிப் பாய்ச்சல் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாவிட்டாலும், 8.2 சதவீத வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. சின்னம் பறிப்பு, அதிகார முறைகேடு, பணம் என பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து, நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது ஜனநாயக மறுமலர்ச்சியாகும்.

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சியாக அங்கீகாரம் கிடைத்திருப்பது ”தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப் பாய்ச்சல்” என அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலக்கட்சி அங்கீகாரத்தை ஊக்கமாகக் கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தேர்தலில் 35,60,485 வாக்குகளைத் தந்து, நாம் தமிழர் கட்சியைப் பெரும் அரசியல் ஆற்றலாக உருவெடுக்கச் செய்த தாய்த்தமிழ்ச் சொந்தங்களுக்கும் உயிரைக் கொடுத்து உழைத்த உயிருக்கினிய தம்பி, தங்கைகள் என அனைவருக்கும் உளப்பூர்வமான அன்பினை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com