மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

முதல் பிரிவில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையம்
மேட்டூர் அனல் மின் நிலையம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இன்று(ஜூன் 18) காலை 6 மணிக்கு இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் மின் உற்பத்தி துவங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் பிரிவில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com