கள்ளக்குறிச்சி: சாராயம் காய்ச்சி விற்பனை -அதிமுக நிர்வாகி கைது!

கல்வராயன் மலையையொட்டிய பகுதிகளில் சுரேஷ் சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி: சாராயம் காய்ச்சி விற்பனை -அதிமுக நிர்வாகி கைது!

சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக அதிமுக நிர்வாகி சுரேஷ் என்கிற சுரேஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கள்ளநத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது கடந்த காலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழக்குகளிள் இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டும் உள்ளார். இவர் அஇஅதிமுக விவசாய அணியின் ஆத்தூர் கிழக்கு மண்டல செயலாளராக பொறுப்பு வகித்தவர். தற்போது அஇஅதிமுக உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணப்பாச்சி சுற்றுவட்டாரத்தில் கல்வராயன் மலையையொட்டிய பகுதிகளில் சுரேஷ் சமீப காலமாக சாராயம் காய்ச்சி விற்று வந்தது குறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சாராயம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இன்று(ஜூன் 25) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்கள்
சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருள்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com