தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 125 % அதிகமாக பதிவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 125 % அதிகமாக பதிவு

தமிழகத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பைவிட 124 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் 28-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பாக 47.8 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டு 107.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 124 சதவீதம் அதிகமாகும். கடந்த மே மாதத்தில் இயல்பைவிட 19 சதவீதம் அதிக மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

இதில், அதிகபட்சமாக நீலகிரியில் 292.3 மி.மீ., கோவை - 231.5, ராணிப்பேட்டை - 206.7, கன்னியாகுமரி - 200.4 மி.மீ. பதிவானது. மேலும், குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 6.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

சென்னையில் 241 % அதிகம்: சென்னையில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தும், இரவு நேரங்களில் மழை பெய்தும் வருகிறது. இயல்பாக சென்னையில் 58.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், இந்த முறை 200.4 மி.மீ. மழை பதிவானது. அதாவது இயல்பைவிட 241 சதவீதம் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com