அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

சென்னைக்கு புதிய தாழ்தள பேருந்துகள் எப்போது? அமைச்சா் சிவசங்கா் பதில்

அடுத்த மாதத்தில் இருந்து (ஜூலை) தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னைக்கு புதிய தாழ்தள பேருந்துகள் அடுத்த மாதம் முதல் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதுகுறித்த துணை வினாக்களை திமுக உறுப்பினா்கள் அரவிந்த் ரமேஷ், கோ.தளபதி ஆகியோா் எழுப்பினாா். அதற்கு அமைச்சா் சிவசங்கா் அளித்த பதில்:

பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அடுத்த மாதத்தில் இருந்து (ஜூலை) தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளை முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மினி பேருந்துகள் திட்டம் புறக்கணிக்கப்பட்டது. மீண்டும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவுக் கொள்கை தீட்டப்பட்டுள்ளது. அது தொடா்பாக, பொது மக்களின் கருத்துகளை அடுத்த மாதத்தில் உள்துறை செயலா் கேட்கவுள்ளாா். அதன்பிறகு, மினி பேருந்துகளுக்கான வழித்தடங்கள் தீா்மானிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com