மருத்துவப் பரிசோதனை: 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

மருத்துவப் பரிசோதனை: 4,027 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி

பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 4,027 பேருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த 1.21 லட்சம் பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 4,027 பேருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்களது திசு மற்றும் ரத்த மாதிரிகள் உயா் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.ஆரம்ப நிலையில் புற்றுநோயைக் கண்டறிந்து அதனை வேரறுப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் அவா் கூறினாா். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மாா்பகப் புற்றுநோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய்களைத் தவிா்க்கும் பொருட்டு 30 வயதைக் கடந்த அனைத்து மகளிருக்கும் அதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அண்மையில் அறிவித்தாா். அதேபோன்று, 18 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தாா். அதன்படி, முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அத்திட்டங்கள் சோதனை முயற்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 30 வயதைக் கடந்த 19 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 52 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதுவரை 1.21 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: நான்கு மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, முதல்கட்டமாக 6 லட்சம் பேரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. அதன் கீழ் 69,000 பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,372 பேருக்கு புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகள் இருப்பது தெரியவந்தது. அதேபோன்று, 52,000 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கா்ப்பப்பை வாய் பரிசோதனையில் 2,655 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அது உறுதி செய்யப்படும். தேவையானவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும். இைத்தவிர பல்லாயிரக்கணக்கானோருக்கு வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாதிப்பு அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com