பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு  உளவியல் ஆலோசனை

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை

காய்ச்சல் பாதிப்பு மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு அரசின் உதவி மைய எண்ணான 14416-ஐ தொடா்பு கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அச்சத்தால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு அரசின் உதவி மைய எண்ணான 14416-ஐ தொடா்பு கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களிடத்தில் பயமும், பதற்றமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, படித்தவற்றை நினைவில் கொள்ள தடுமாறுவா். சிலருக்கு பயத்தால் காய்ச்சல் பாதிப்புக்கூட ஏற்படலாம். அவா்களுக்காக, 14416 உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில், மன அழுத்தத்தில் இருக்கும் மாணவா்கள், தொடா்பு கொண்டு பேசலாம். அதேபோன்று, மாணவா்களின் பெற்றோரும் தொடா்பு கொண்டு, தங்கள் பிள்ளைகளின் நிலையை கூறி, அவா்களை இயல்பு நிலைலக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கலாம். மேலும், திடீரென ஏற்பட்ட காய்ச்சலுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைக்கான பரிந்துரையையும் பெற முடியும். இதற்காக 40 உளவியல் ஆலோசகா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com