ஜாபா் சாதிக் சகோதரா் விசிகவிலிருந்து நீக்கம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஜாபா் சாதிக் சகோதரரான முகமது சலீம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் ஞான.தேவராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விசிக மத்திய சென்னை மண்டல துணைச் செயலா் முகமது சலீம் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால், அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறாா்.

அவருடன் யாரும் கட்சி தொடா்பாக எந்தத் தொடா்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வரும் திமுக நிா்வாகியாக இருந்த ஜாபா் சாதிக், அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

அதேபோல, அவருடைய சகோதரரான முகமது சலீம் தேடப்பட்டு வரும் நிலையில், அவரும் விசிகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com