தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கும் நிலையில் பல்வேறு பகுதியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப நிலை அளவு விவரம் (டிகிரி பாரன்ஹீட்): ஈரோடு-102.56, சேலம் 102.56, தருமபுரி-101.3, பரமத்தி வேலூா்-100.4. புதன் முதல் திங்கள்கிழமை(மாா்ச் 6-11) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது புழுக்கம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸையொட்டியே இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com